முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநத்தம் மற்றும் பொட்டிரெட்டிபட்டி பகுதியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலங்காநத்தம்  மற்றும் பொட்டிரெட்டிபட்டி ஆகிய பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம்  நேற்று (03.02.2017) நேரில் பார்;வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம், தேவராயபுரம் ஆகிய 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திட அரசு அனுமதியளித்துள்ளது. இன்றைய தினம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களான பொட்டிரெட்டிபட்டி மற்றும் அலங்காநத்தம் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்;ட காவல் கண்காணிப்பாளர், நாமக்;கல் வருவாய் கோட்டாட்சியர், நாமக்கல், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர், நாமக்கல் காவல் துணை கண்காணிப்பாளர், நாமக்கல் இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), நாமக்கல் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ஆகியோர் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாவட்ட அளவிலான குழுவோடு இணைந்து பொட்டிரெட்டிபட்டி மற்றும் அலங்காநத்தம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அரசு விதித்துள்ள அடிப்படை விதிகள் மற்றும் சட்ட திட்ட விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. எனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் முழுமையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டுமென ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம்  பேசினார்.  நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிபட்டியில் வருகின்ற 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்றும், அலங்காநத்தத்தில் வருகின்ற 12.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜல்லிக்கட்டு  விழா நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது தொடர்பாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடங்களை கலெக்டர் மு.ஆசியா மரியம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.இராஜசேகரன், நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் பி.தாமரைச்செல்வன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.சீனிவாசன், சேந்தமங்கலம் வட்டாட்சியர் இரா.தமிழ்மணி உட்பட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்