முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் பொது விருந்து நிகழ்ச்சி:கலெக்டர் வா.சம்பத் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

இந்து அறநிலையத்துறை சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நேற்று (03.02.2017) சேலம் மாவட்டம், ஆத்தூர் வெள்ளபிள்ளையர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் வா.சம்பத், , தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  ஆர். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது:தமிழக அரசு மதம், இனம், உயர்வு தாழ்வு வேறுபாடுகளின்றி அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு நாட்களும் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் 03.02.2017 இன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம் நகர். அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம் நகர். அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், செவ்வாய்ப்பேட்டை, சேலம் நகர். அருள்மிகு எல்லைப்பிடாரியம்மன் திருக்கோயில், குமாரசாமிப்பட்டி, சேலம் நகர். அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பசுவாமி திருக்கோயில், ஜாகீர் அம்மாபாளையம், சேலம். மேலும், அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், காருவள்ளி சின்னதிருப்பதி, ஓமலூர். அருள்மிகு வெள்ளைப்பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர் நகர். அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், எடப்பாடி நகர், சங்ககிரி வட்டம்.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், கல்வடங்கம், சங்ககிரி வட்டம் ஆகிய ஒன்பது திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. மத, இன வேறுபாடுகளின்றி அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு,  கலெக்டர் வா.சம்பத், இ.ஆ.ப., தெரிவித்தார். முன்னதாக சேலம் மாவட்டம், ஆத்தூர் வெள்ளப்பிள்ளையர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் வா.சம்பத்,  மற்றும் தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  ஆர். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர்  ராமகிருஷ்ணன், செயல் அலுவலர்கள்  சி. கிருஷ்ணன்,  க. அழகு லிங்கேஸ்வரி,  ம.சண்முகம், மற்றும் ஆத்தூர் அ. மோகன், ரஞ்சித் குமார்  திருக்கோயில் பணியாளர்கள் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்