முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில் தேர்வாணைய தேர்வு இலவசபயிற்சி வகுப்பு:எம்எல்ஏ சு.ரவி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் எஸ்.ஆர்.கேட் அருகில் நகராட்சி ஆரம்ப பள்ளியில் அரசு தேர்வாணைய தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு மையம் துவக்;க விழா நேற்று காலை (3ந் தேதி) நடைபெற்றது. இந்த துவக்க விழாவிற்கு வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு (ம) பயிற்சி துறை அலுவலர் வி.அருணகிரி தலைமை தாங்கி பேசினார். அப்போழுது அவர் பேசியதாவது.     மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 82ஆம் ஆண்டு முதல் இது போன்ற அரசு தேர்வாணைய தேர்வு எழுதுபவர்களுக்காக இலவசபயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 200பேர் வரையில் தற்போது படித்து பயனடைந்து வருகிறார்கள். அதுபோல் இங்கும் அரசு தேர்வாணைய தேர்வு இலவச பயிற்சி வகுப்பு மையமாகும் திறக்கபட்டு உள்ளது. இது மாவட்டத்தின் இரண்டாவது மையம் என்பது குறிப்பிடதக்கது என்று பேசினார்.     இராணிபேட்டை வருவாய் துறை கோட்டாச்சியர் ப.முருகேசன் பேசிய போது. அரசு துறையில் 15 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, உங்கள் எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது. எனவே, படித்த இளைஞர்கள் இங்கு சேர்ந்து தேர்வுகளை எப்படி எதிர்கொள்வதென்;று கற்று கொள்ளுங்கள் உயர்ந்த பதவிகளுக்கு நீங்களும் வரலாம் என்று வாழ்த்தி பேசினார்.   சு.ரவி எம்எல்ஏ தனட சிற்புரையில் பேசிய போது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசிகளோடும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வழிகாட்டுதலின் பேரிலும், தமிழக முதல்வர் உத்திரவிற்கிணங்கவும் சட்ட மன்றத்தில் உங்களுக்காக சட்ட மன்றத்தில் பேசி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (அனைத்து குருப்புகளுக்கும்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மற்றும் காவல்துறை என பல்வேறு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக இம் மையத்தை கொண்டு வந்தேன் இனி அரசு வேலை கனவு நிச்சயம் உங்களுக்கு கைகூடும் எனவே, உங்களோடு வேலையில்லாமல் இருக்கும் பல இளைஞர்களையும் நண்பர்களையும், அழைத்து வாருங்கள் இந்த தொகுதியில் உள்ள அதிகம் பேர் அரசு துறை பணிகளில் உள்ளனர் என்ற நல்ல தகவல் மற்றும் பெருமை கிடைக்க வேண்டும் என எல்லோரையும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு சு.ரவி எம்எல்ஏ பேசினார்.   கூட்டத்தில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏஎம்.நாகராஜ், ஏவி.ரகு, முரளிகிருஷ்ணன், ஏ.கணேசன்,  துளசிராமன், ஐயப்பரெட்டி, சேகர், முன்னாள் கவுன்சிலர் செல்வம், அதிமுக பொதுக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி பத்பநாபன், பாசறை யோகனந்த், கீழ்குப்பம் ஏ.எல்.நாகராஜன், டவுன் வருவாய் அய்வாளர் அருள்செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கோபிநாத், பொறியாளர் சண்முகம், சுகாதார அலுவலர் மோகன், உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலக உதவியாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்