முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீத் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவிடம் இருந்து எந்த சான்றிதழும் தேவை இல்லை: பாகிஸ்தான் திமீர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - ஹபீஸ் சயீத் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சான்றிதழும் தேவை இல்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

தேடப்படும் குற்றவாளி
மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத். பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவரான இவனை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்கா இவனது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணையித்துள்ளது. அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது.

டிரம்ப் அதிரடி
இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் உள்ளான். ஐ.நா.வும் கடந்த 2008-ம் ஆண்டு ஜமாத் உத் தவா அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. இருப்பினும் பாகிஸ்தானில் சுதந்திரமாக ஹபீஸ் சயீத் திரிந்தான். இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்படுவதும் இவனே. அமெரிக்காவில் ஒபாமா அரசு இருக்கும் வரையில் எச்சரிக்கையை காதில் வாங்கிக்கொள்ளாத பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதாக கூறி டிமிக்கி கொடுத்தது. இப்போது டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் பாகிஸ்தான் வயிற்றில் புளியை கரைத்து உள்ளது.

வீட்டுக்காவல்
இந்த நிலையில் ஹபீஸ் சயீத் கடந்த 3 நாட்களுக்கு முன் அதிரடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் அங்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜமாத் உத் தவா இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தியா அறிக்கை
பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா மற்றும் சீனாவின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஹபீஸ் சயீத் மற்றும் அவரது இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஹபீஸ் சயீத் மீதான நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது.அதில் ஹபீஸ் சயீத் மற்றும்  மற்றவர்கள் மீதான நடவடிக்கை முன்பே எடுத்து இருக்க வேண்டும்ம என கூறினார்.

சான்றிதழ் தேவை இல்லை
இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-ஹபீஸ் சயீத் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு  இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சான்றிதழும் தேவை இல்லை.கூறும்போது ஹபீஸ் சயீத்துக்கு எதிராக இந்தியா வலுவான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். அவருக்கு எதிராக  கூறப்படும் குற்றசாட்டுகள் தீவிரமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்