முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலை முடி அடர்த்தியாக வளர மருந்து பயன்படுத்தும் டிரம்ப் : டாக்டர் ஹரோல்டு தகவல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அடர்த்தியாக தலை முடி வளர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருந்துகளை பயன்படுத்துகிறார் என அவரது டாக்டர் தெரிவித்துள்ளார்.

அடர்த்தியான தலைமுடி
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்டவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவரது நீளமான தலை முடி அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அவரது அடர்த்தியான பிடரி மயிர்  காற்றில் அலை அலையாக பறந்து வசீகரித்தது. 70 வயதிலும் டிரம்புக்கு எப்படி அடர்த்தியான தலைமுடி உள்ளது என கேள்வி அனைவரிடமும் எழுந்தது. இது அவரது உண்மையான தலை முடிதானா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

குடும்ப டாக்டர் தகவல்
அது குறித்து ரகசியத்தை அவரது குடும்ப டாக்டர் ஹரோல்டு என் பார்ன்ஸ்டீன் உடைத்துள்ளார். அடர்த்தியான தலை முடி வளர டிரம்ப் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். அவர் தோல் நோய் ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு மருந்துகளையும், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை  தடுக்கவும், தலைமுடி அடர்த்தியாக வளரவும் என 3 வித மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்.

‘பினாஸ் டெரிட்’
தலையில் வழுக்கை விழாமல் அடர்த்தியாக முடி வளர ‘பினாஸ் டெரிட்’ என்ற மாத்திரையை சாப்பிடுகிறார். அது அவரது தலை முடி உதிராமல் அடர்த்தி மற்றும் நீளமாக வளர  உதவுகிறது. மேலும் மாரடைப்பை தடுக்க பேபி ஆஸ்பிரின் மருந்து சாப்பிடுகிறார். இத்தகவலை ஒரு பேட்டியின் போது அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago