முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்ற லட்சியத்துடன் செயல்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

 

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, பேயன்விளை கே.ஏ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 348 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசும் போது தெரிவித்தாவது:

 

புரட்சித்தலைவி அம்மா இந்தியாவில், தமிழகம்தான் மற்ற மாநிலங்களைவிட முன்னேறிய முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டு அதற்கான திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதன்பயனாக தமிழகம் இன்று முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. ஜாதி, மதம், இனம் வேறுபாடு இன்றியும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகள் இன்றியும் அனைவருக்கும் அனைத்துத் திட்டங்களும் கிடைக்கின்ற வகையில் திட்டங்களை உறுவாக்கி செயல்படுத்தினார்கள். இப்பள்ளி மதநல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இங்கு இவ்விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

 

புரட்சித்தலைவி அம்மா மாணவ-மாணவிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை உலக தரத்தில் மேம்படுத்தும் நோக்கத்தில்; கல்விக்காக அதிக நிதி ஒதிக்கீடு செய்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து நல்லாட்சி புரிந்தார். மேலும், மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி, விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், இலவச பேருந்து பயண அட்டை, சீரூடை, காலணிகள், வண்ண பென்சில்கள், சிலேட்டுகள், உலகப்படம், ஜியோமெட்ரிக் பாக்ஸ், கல்வி உதவித்தொகை, விலையில்லா மடிக்கணனி, விலையில்லா மிதிவண்டி போன்ற 14 வகையான உதவிகளை மாணவர்களுக்கு இந்த அரசு அளித்து வருகின்றது. 2016 - 2017ம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 83 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 136 பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 18,604 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. பெற்றோர்களுக்கு எந்த சிரமமும் இல்லாத வகையில் மாணவர்கள் சிறந்த கல்வி கற்க தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் அம்மா ஏற்படுத்தி தந்துள்ளார்கள். எனவே மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த முறையில் பயின்று முதன்மை இடத்தை பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் - என்றார்.

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் செந்தூர்கனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், கே.ஏ.கல்விச்சங்கம் தலைவர் ஹாஜி.எஸ்.எம்.அப்துல்காதர், தலைமையாசிரியை சோமசுந்தரி, உதவி தலைமையாசிரியை சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்