முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி.

 

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, மக்கள் கல்வி மைய சேர்மன் பொன்ராஜ் தலைமை வகித்து பள்ளிக்கு ஹாக்கி ஸ்டிக்குகள் வழங்கினார். கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் சண்முகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் முத்துசிவன் வரவேற்றார்.விளையாட்டு விழாவில் பள்ளியின் கல்விக்குழு உறுப்பினரும், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருமான ராஜப்பாவெங்கடாச்சாரி, தொழில்அதிபர் ஆழ்வை ஆதிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வயலட் ஹவுஸ் கேப்டன் முருகனுக்கு சுழற்கோப்பை மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர் இசக்கிமுத்து, சீனியர் பிரிவில் மாணவர் பாலமுருகன், ஜூனியர் பிரிவில் மாணவர் கணபதி, ஆசிரியர்கள் பிரிவில் ஆசிரியர்கள் குப்புசாமி, கீதா, பகவதி, மகராசி ஆகியோர் போட்டிகளில் வெற்றிபெற்று பரிசு பெற்றனர்.இதில், கேஜிஎஸ் கல்லூரி விளையாட்டுதுறை பேராசிரியர் மாரியப்பன், அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்துறை ஆசிரியை சாந்தா, எஸ்டிஏ பள்ளி விளையாட்டு துறை ஆசிரியர் பாலா, ஆசிரியர்கள் சுப்பையா, செந்தமிழ்செல்வன், முத்துலெட்சுமி, மெர்சிகமலம், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் பாலு, விவேக் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் விளையாட்டு ஆசிரியர் ஜெயமுருகன் நன்றி கூறினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago