முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூரில் மதுப்பழக்கம் மற்றும் கள்ளச்சாரயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் கொடியசைத்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட கலால் துறை மூலம் மதுப்பழக்கம் மற்றும் கள்ளச்சாரயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   கொடியசைத்து வைத்தார்.

         

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி காவல் ஆணையர் அலுவலகம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கள்ளச்சாராய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடியும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்றனர். முன்னதாக கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

         

பின்னர், வ.உ.சி மைதானத்தில் மாணவ மாணவியர்களுக்கு மதுவினால் உடலில் உண்டாகும் தீமைகள் குறித்தும் மருத்துவர்களால் விளக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

         

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் (கலால்) து.வெங்கடேசன், மாவட்டட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) நூர்முகம்மது, கோட்ட கலால் அலுவலர்கள் ஜெயசித்ரா, ருக்மணி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்