முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம் மநகர மற்றும் ஊரக பகுதிகளில் சீரான வகையில் குடிநீர் வழங்கிட அலுவலர்கள் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் கண்கானிப்பு அலுவலரும், கைத்தறி, கைத்திறன், ஜவுளி மற்றும் கதர்துறை முதன்மைச் செயலருமான ஹர்மந்தர்சிங் வேண்டுகோள்!!!

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (03.02.2017)அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள் குறி;தத ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   முன்னிலையில், மாவட்ட கண்கானிப்பு அலுவலரும், கைத்தறி, கைததிறன், ஜவுளி மற்றும் கதர்துறை முதன்மைச் செயலருமான ஹர்மந்தர்சிங்   தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து முதன்மைச் செயலாளர்  தெரிவிக்கையில்,

 

          கோயம்புத்தூர் மாவட்டத்தில், மழை இல்லாத காரணத்தினால் குடிநீர் தேவை அதிகளவில் உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, வருவாய்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவரும் சூழ்நிலைக்கேற்றவாரு செயல்படுவது அவசியாமாகும். குடிநீர் வழங்கல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்த வரை 9-குடிநீர் திட்டப்பணிகளில் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் முற்றிலும் குறைந்து விட்டதால் ஆழியார் மற்றும் பவானி ஆற்றில் பெறப்படும் தண்ணீர் மட்டுமே வைத்து மக்களின் தேவைக்கு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலையில் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். ஊராட்சி செயலருக்கு தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனை என்ன என்பது நன்றாக தெரிய வரும். அதுபோன்ற நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று பொதுமக்களின் பிரச்சனையை தீர்த்திட வழிவகை செய்திட வேண்டும். அதேபோல் தங்கள் பகுதிகளில் ஊராட்சி செயலர் குடிநீர் விநியோக பணியாளர் மூலம் மேல்நிலைத் தொட்டிகளை முறையாக பராமரிப்பதிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற காலகட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்துளை கினறுகளையொட்டி மழைநீர் சேகரிப்பு மையங்களை அமைத்திட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு காய்ச்சல்  விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சலை பற்றி அறிந்து கொள்ளும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல். கிராமப்புறங்களில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணிகளை நடத்துதல், உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, தண்ணீர்; தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல், போன்ற  விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் அவரவர் வீடுகளிலும் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர்  தேங்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அரசுத் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

          அதனைத் தொடர்ந்து கல்வித்துறையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவது குறித்தும், பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான வசதிகள், படித்த ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து  ஆய்வு மேற்கொண்டார். மேலும் பல்வேறு அரசுத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிகள் குறித்து விரிவாக ஆய்வு  செய்தார்.

          அப்போது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு, அதன் தற்போதைய நிலை குறித்து மாவட்ட கலெக்டர்  வாயிலாக உடனடியாக தெரிவிக்குமாறும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

 

                இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ப.சிதம்பரம், பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் சுரேஷ், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago