முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில் மகிமைகள்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில். பாரத தேசத்தின் தென்திசையில் காவிரி  பாய்ந்தோடும் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும் கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் வீற்றிருக்கும் ஆயிரம் கண்ணுடையாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு மாரியம்மன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்து கருணை மழை பொழிந்து பூவின் மணமாகவும் பழத்தின் சுவையாகவும் கருணை கடலாகவும் யாவராலும் துதித்து தீராத நோய்களையும் தீவினைகளையும் தீர்த்து அருளும் கருணை உள்ள கொண்டு திகழ்ந்து வருகிறாள். தேவீ மஹாத்மியத்தில் 'சைவகாலே மஹா காளி மஹாமாரி ஸ்வரூபையா" என்று சொன்னவாறு பிரபஞ்சத்தை தோற்றுவித்து ரட்சித்து லயப்படுத்திக் கொண்டுள்ளாள். இந்த பராசக்தியே மாராசூரனை சம்ஹரிக்க மஹாமாரி வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி வேண்டுவோர்க்கு வேண்டிய வரும் தரும் சக்தி வாய்ந்த தளமாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிமல் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். சபரி மலை, பழனி, வேளாங்கன்னி, மேல்மருவத்தூர், திருப்பதி போன்ற ஆலயங்களுக்கு சுற்றுலா செல்வோர் இங்கும் வந்து செல்கின்றனர். மேலும் கருர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கிளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஞ்கள் உடையணிந்து மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வேப்பிலை கையிலேந்தி பாதயாத்திரையாக வருகின்றனர்.  இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொறிதல் விழா, சித்திரை மாதம் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.

பங்குனி மாதம் பிறந்தவுடன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பூச்சொறிதல் விழா நடைபெறும் அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் அம்மனை பூக்களால் அலங்கரித்து மேள தாளம், வாணவேடிக்கை, பாரம்பரிய தப்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வருவர். 5வாரம் பூச்சொறிதல் விழா முடிந்து சித்திரை பிறந்து முதல் செவ்வாய் கிழமை சித்திரை தேரோட்டம் நடப்பது வழக்கம். தேரோட்ட காலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து மேள தாளத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து இரவு கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கை  கூடும் என்பது நம்பிக்கை. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், பெரம்பலூர், துறையூர், திருச்சி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்;துகள் இயக்கப்பட்டு வருகிறது. அம்மை போன்ற தீராத நோய்களால் பாதித்தவர்கள் இங்கு வந்து தங்கி சென்றால் பூரண குணமாகும் என்பது ஐதீகம். எனவே பலர் வந்து தங்கி செல்கின்றனர்.ம எனவே சமயபுரம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இப்படி சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. சம்பிராதாயப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிN~கம் நடத்தப்படவேண்டும். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நன்கொடையாளர்கள் கொடுத்த நிதி உதவியுடன் பலகோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த கோவில் வளாகம் தற்போது நன்கொடையாளர்களால் கிரயம் பெற்று ஒப்படைக்கப்பட்ட சுமார் 22 ஏக்கர் நில பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு அங்கு முடி மண்டபம், குளியல் வசதிகள் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் மிகவும் பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அங்கிருந்த பெருவளை வாய்க்காலையே அப்புறப்படுத்தி திருப்பி விடப்பட்டுள்ளது.

கோவிலின் கிழக்கு பகுதியில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. கோவில் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாலாலயம் நடந்து 6 மாதங்கள் முடிந்து விட்டதாலும் பக்தர்களின் வழிபாட்டு நலன் கருதி கோவில் கும்பாபிசேகத்தை விரைவில் முடிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையின் விளைவாக வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கும்பாபிசேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே கிழக்கு வாசல் ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்கள், மூலஸ்தான விமானம மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வருகிற 6ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்  கும்பாபிN~கம் நடைபெறுகிறது.

இதற்காக யாகசாலை பூஜைகள் 3ஆம் தேதி தொடங்கியது. கும்பாபிசேகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு,  அடிப்படை வசதிக்காக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் படி சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக 4 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறைகள் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது. கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை இணைஆணையர் தென்னரசு தலைமையில்  அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago