முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஆயுதங்களைப் பயன்படுத்தினால் வடகொரியாவுக்கு பேரழிவு ஏற்படும் : அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - வடகொரியா அணுஆயுதங்களைப் பயன்படுத்தினால் அந்த நாடு பேரழிவைச் சந்திக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியாவுக்கு அச்சுறுத்தல் :
வடகொரியா அண்மைகால மாக அணுஆயுத சோதனைகள், நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகள் சோதனையை நடத்தி வருகிறது. தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தென்கொரியா, அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் என்றும் வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இந்த சவாலைச் சமாளிக்க அமெரிக்கா வின் அதிநவீன ரேடார் தென் கொரியாவில் நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

அமைச்சர்கள் சந்திப்பு :
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் தென்கொரிய தலைநகர் சியோல் சென்றார். அங்கு அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹான் மின் கு, பொறுப்பு அதிபர் வாங் கியோ ஹன்னை சந்தித்துப் பேசினார். பின்னர் ஜேம்ஸ் மேத்திஸ் நிருபர்களிடம் கூறியபோது, அமெரிக்கா மீதோ அல்லது அதன் நட்பு நாடுகள் மீதோ வடகொரியா அணுஆயுதங்களைப் பயன் படுத்தினால் அந்த நாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். வடகொரியா பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

ஐப்பானில் அமெரிக்க அமைச்சர் :
இதைத் தொடர்ந்து நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற மேத்திஸ் அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார். ஜப்பானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்துக்கான செலவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேத்திஸும் அபேவும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் நிருபர் களுக்கு பேட்டியளித்தபோது, இருநாட்டு பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். வரும் 10-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்லும் ஷின்சோ அபே அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேச உள்ளார்.

வடகொரிய அமைச்சர் நீக்கம்:
இதனிடையே வடகொரியா வின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் வான் ஹாங் பதவியில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழல் குற்றச் சாட்டுகள் தொடர்பாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்