முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் அருங்காட்சியகத்தில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

பாரீஸ்  - பாரிஸில் உள்ள  லூவர் அருங்காட்சியகத்தில் நுழைய முயன்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

அத்துமீறி நுழைந்த தீவிரவாதி :
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் லூவர் அருங்காட்சியம் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அங்கு சுமார் 35 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கலை பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக லூவர் அருங்காட்சியகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையும் மீறி அங்கு சென்ற தீவிரவாதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரரை கத்தியால் குத்தினார். இதில் அவர் காயமடைந்தார்.

சுட்டு பிடித்தனர் :
உடனடியாக மற்ற வீரர்கள் அந்த தீவிரவாதியை துப்பாக்கியால் சுட்டனர். வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் கீழே விழுந்தார். அவரை கைது செய்த பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 பைகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அசம்பாவிதம் தவிர்ப்பு :
சந்தேகத்தின்பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸார் கூறியபோது, லூவர் அருங்காட்சியகத்துக்குள் தீவிரவாதி உள்ளே நுழைய முயன்றபோது சுமார் 250 பார்வை யாளர்கள் அருங்காட்சியகத் துக்குள் இருந்தனர். தீவிரவாதியை சுட்டு பிடித்ததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். கடந்த 2015 ஜனவரியில் பாரிஸில் உள்ள சார்லி ஹேப்டே பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு நவம்பரில் பாரிஸின் 6 இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர். 368 பேர் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago