முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்கள் அனைத்து தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்:அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி பேச்சு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி சூரமங்கலத்தில் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர்கள் விடுதி திறப்பு விழா மற்றும் சார்நிலை கருவூல கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில்  பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி   தொடங்கி வைத்தார். இவ்விழா கலெக்டர்வா.சம்பத்,இ.ஆ.ப.,  தலைமையும், நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.        பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும்,  அடிக்கல் நாட்டியும் பேசியதாவது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் இன்றை தினம்  சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, போடிநாயக்கன்பட்டியில் தமிழக அரசின் மிக பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர்கள் விடுதிக்கு புதிய விடுதி கட்டடம் கட்டும் பணிக்காக ரூ.1.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் விடுதிக் கட்டடம் கட்டும் பணியானது  முடிக்கப்பட்டு, இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் நல்லமுறையில் படித்து, மேலும் உயர்கல்விக்கு செல்ல ஏதுவாக அனைத்து வசதிகளுடன் இவ்விடுதி கட்டித்தரப்பட்டுள்ளது.        மேலும்,  புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து சூரமங்கலம் பகுதியில் ரூ.66.55 லட்சம் மதிப்பிலான சார்நிலை கருவூல கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சார்நிலை கருவூல கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டங்கள் மூலம் பள்ளி மணவ, மாணவியர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, பாடபுத்தகம், திறமை வாய்ந்த ஆசிரியர்கள், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட  அனைத்து வசதிகளும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்க ஏதுவாக ஏற்படுத்தியதன் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப்பள்ளியில் தேவையான அனைத்து வசதிகளுக்கும் உருவாக்கியதன் காரணத்தால் அரசு பொதுத்தேர்வுகளில் சேலம் மாவட்ட மாணவ, மாணவியர்கள் தமிழக அளவில் சாதனை படைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.மேலும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு சேலம் மாவட்டத்திற்கென ரூ.340 கோடி மதிப்பில் நடைபெறும் உயர்மட்ட பாலப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க திருவாக்கவுண்டனூர் பைபாஸ், ஏ.வி.ஆர் ரவுண்டானா, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதியில் மிகப்பெரிய பாலம் மற்றும் ஸ்டில் பிளான்ட் பகுதிகளில் 145 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம், செவ்வாய்பேட்டை பகுதியில் உயர்மட்ட பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் என சேலம் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் எளிதாக பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது போன்ற எண்ணற்ற பல திட்டங்களை  அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு  பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி  பேசினார்.       இவ்விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (க,ப) மு.சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர் சி.விஜய்பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நெ.செல்வம், உதவி செயற்பொறியாளர் செந்தாமரை, வட்டாட்சியர் பெலிக்ஸ்ராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்