முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடி ரிவேரா சர்வதேச கலை மற்றும் விளைட்டு விழா

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் வண்ணமயமாக நடைபெறும் ரிவேரா என்கிற சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவாகும். இந்தாண்டு 4 நாட்கள நடைபெறும்  ரிவேரா கலைவிழா கடந்த 2 தேதி தொடங்கியது இதில் உள்நாட்டிலிருந்தும் ஆப்ரிக்கா தெற்காசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள 250 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவமாணவியர் பங்கேற்றுள்ளனர். இதில் மாணவர்களின் விளையாட்டு மற்றும் அறிவு திறனை வெளிக்கொணரும் வகையில் 150 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ரிவேரா கலை விழாவை கடந்த  12ந் தேதி காலை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார். அன்று மாலை விஐடி திறந்த வெளி அரங்கில் இந்திய திரை இசை பாடகர் சங்கர் மகாவேன் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாளில்  முக்கிய நிகழ்வுகளாக இந்தியா சீனா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் பாரம்பரிய கலாச்சாரம் பறைசாற்றும் வகையில்  ஐக்கியா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவமாணவியர் ஆடல் பாடல்களுடன் அரங்கேற்றினர். அன்று இரவு விஐடி திறந்தவெளி அரங்கில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற கிழக்கத்திய மற்றும் மேற்கத்தியா நடன போட்டி நடைபெற்றது. இந்த நடன போட்டிக்கு நடன இயக்குநர் கல்யான் நடுவராக இருந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.அதனை தொடர்ந்து பாலிவுட் இசை கலைஞர் அர்மான் மாலிக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது கிழக்கத்திய நடன போட்டியில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், முதலிடத்தையும் விஐடி சென்னை வளாகம் இரண்டாமிடத்தையும், மேற்கத்திய நடன போட்டியில் சென்னை லயோலா கல்லூரி முதலிடத்தையும், அண்ணா பல்கலைகழகம் இரண்டாமிடத்தையும், எஸ்ஆர்எம் பல்கலைகழகம் மூன்றாமிடத்தையும் பெற்றன. விஐடி ரிவேரா கலை விழா நிகழ்வுகளில் ஒன்றாக விஐடி மாதிரி ஐக்கிய நாடுகள் சபை அரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 600 மாணவமாணவியர் பங்கேற்று சர்வேதச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பு, சிரியா நாட்டில் மனித உரிமை நிலை நாட்டுதல், ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கான மேலாண்மை, இஸ்ரேல் நாட்டு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான விழிப்புனர்ச்சி, பெண்களின் ஆளுமையை ஊக்குவித்தல், இந்திய நாட்டின் புதிய கல்வி கொள்கை சம்மந்தமா விவாதிக்கப்பட்டது. நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்பரேசன் சேர்மன் பாலசந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சமூக விழிப்புணர்ச்சி மற்றும் மிதமிஞ்சிய காமெடி என்ற தலைப்புகளில் முதல் நிமிடம் ஓடும் தமிழ் குறும் படம் தயாரித்தல் போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.இதற்கு இளமி தமிழ் சினிமா இயக்குநர் ஜீலியன் பிரகாஷ் மற்றும் மூடர் கூடம் பட நடிகர் இயக்குநர் நவீன் ஆகியோர் நடுவர்களாக இருந்து 15 சிறந்த குறும் படங்களை தேர்வு செய்தனர். அதே போன்று மற்ற இந்திய மொழிகளில் குறும்படம் தயாரிக்கும் போட்டி அதே கண்கள் பட  இயக்குநர் ரோயின் வெங்கடேஷ் இசையமைப்பாளர் ஜிப்ரான் நடுவர்களாக விளங்கிய போட்டியும் நடத்தப்பட்டது.இதில் மாணவர்கள் 51 குறும்படங்களை தயாரித்தனர். ரிவேரா நிகழ்வாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி முதலிடத்தையும் காஞ்சிபுரம் சந்திரசேகர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயா இரண்டாமிடத்தையும் விஐடி பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பெற்றன. ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் சேலம் ஏவிஎஸ் கலைக் கல்லூரி முதலிடத்தையும் கிண்டி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிஇரண்டாமிடத்தையும் கோவை இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன. டென்னிஸ் ஆண்கள் போட்டியில் சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும் விஐடி பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும் விஐடி சென்னை வளாகம் மூன்றாமிடத்தையும் பெற்றன. பெண்களுக்கான கையுந்து பந்து போட்டியில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தையும் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இரண்டாமிடத்தையும் புதுச்சேரி மனக்குள விநாகர் தொழில்நுட்ப கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்