முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில தேர்தலுக்கு பின்னர் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை : பாகிஸ்தான் நம்பிக்கை

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த பின்னர் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்று பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உரி என்ற இடத்தில் இருந்த இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 15 பேர் வீரமரணமடைந்தனர். உடனே இந்திய ராணுவம் சர்ஜிக்கல் அட்டாக் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தனர். மேலும் இருநாடுகளிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை இந்தியா நிறுத்திவிட்டது.

பாக். நம்பிக்கை:
இந்த நிலையில் பாகிஸ்தான் திட்டத்துறை அமைச்சர் அஷன் இக்பால் அமெரிக்கா சென்றுள்ளார். தலைநகர் வாஷிங்டன்னில் கூடியிருந்த கல்வியாளர்கள் மத்தியில் இக்பால் கலந்துகொண்டு பேசினார். அப்போது இக்பால் கூறுகையில் இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தல் பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும். அதன் பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார். அதற்கான சூழ்நிலை உருவாகிவிடும்.

விட்டுக்கொடுக்க முடியாது:
இந்தியாவில் தற்போது நடைபெறும் 5 மாநில தேர்தலில் எங்கள் நாட்டு பற்றி பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக இருநாடுகளும் அமைதியாக இருக்க முடியும். எங்களுடைய நாட்டின் பகுதியை விட்டுக்கொடுக்க முடியாது. அதேசமயத்தில் இந்த பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாணப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்