முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை போட்டுக்கொள்வது வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு பேரணி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்

மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா  தடுப்பூசியை இதுவரை  தனியார் மருத்துவமனைகள் தான் பயன்படுத்தி லாப நோக்கில் செயல்பட்டு வந்தனர்.மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு  இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசியை  இலவசமாக போடப்பட திட்டம் இட்டுள்ளது. மேலும்  தேசிய தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. 9 மாதங்கள் நிறைவுற்ற குழந்தைகளும் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் இந்த மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா  தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என
வலியுறுத்தி காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 6 முதல் 28 தேதி வரை இலவசமாக மீசில்ஸ்  (தட்டம்மை) மற்றும் ரூபெல்லா  நோய்  தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என்றும் இந்த ஊசி பாதுகாப்பானதாகும் என்றும் 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள்  அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கோஷம் போட்டு விழிப்புணர்வு செய்த வண்ணம் வட்டாசியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக அண்ணா அரங்கம் வரை நடந்து வந்தனர். இந்த பேரணியில் அரசு மருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் ,   மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இது குறித்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் கூறும்போது, வீண் புரளிகளை நம்ப வேண்டாம் , தடுப்பூசிகள் கொடும் நோய்களுக்கு எதிராக செயல்படுபவை, தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என உறுதி பட கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்