முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினாவில் 144 தடை உத்தரவு வாபஸ்: ஆணையர் ஜார்ஜ்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      சென்னை

சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக, காவல் துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி 17-ம் தேதி முதல் சென்னை மெரினாவில் சுமார் ஒரு வாரம் காலம் மாபெரும் மாணவர்-இளைஞர் போராட்டம் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது. இருப்பினும் கடைசி நாளான ஜனவரி 23-ம் தேதி பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதனையடுத்து, சமூகவலைதளம் மூலம் இளைஞர்கள் மெரினாவில் கூட இருந்ததாக வந்த தகவல்கள் வந்ததாக கூறி மெரினாவில் 44 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் மெரினாவிற்கு நுழைய அதிக அளவில் கட்டுப்பாடுகள் இருந்தது. மெரினா கடற்கரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சுற்றுலா, பொழுதுபோக்கிற்கு வருவோருக்குக்கும், கடற்கரையில் பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சென்னை மாநகர சட்டப்பிரிவு 41-கீழ் அனுமதி இன்று மெரினாவில் கூடுவது, கூட்டம் நடத்துவதற்கு பழைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்