முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியை சேர்ந்த 683மாணவ மாணவியர்களுக்கு ரூ.26.44 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (04.02.2017) பள்ளிக்கல்வித்துறையின் மூலம் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமை வகித்தார்.  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  ஊரக வளர்ச்சித்துறை நிதியின் கீழ் ரூ.45லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஆய்வுக்கூடகத்தினையும், ரூ.25லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கணினி ஆய்வுக்கூடத்தினையும் திறந்து வைத்து மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மதிவண்டி மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வினா வங்கி தொகுப்பினை வழங்கி பேசுகையில்,

தொலைநோக்கு திட்டம்

           அம்மா  துவக்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து  அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தொலை நோக்குப்பார்வையுடன் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஒரு நாட்டையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான் என்பதை உணர்ந்த தமிழக அரசு, மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி கல்வி வரை எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் திட்டங்களனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவை சார்ந்த துறைகளின் மூலம் உடனுக்குடன் பெற்று வழங்கப்படுகின்றது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 62,618 பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ரூ.14.32 கோடி மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சேர்ந்த 22,113 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,01 கோடி மதிப்பீட்டிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

         

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 55,094 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8670 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகளும், 11,58,384 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்களும், 10,15,574 மாணவ, மாணவியர்களுக்கு பாடக்குறிப்பேடுகளும், 87,712 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.28.22கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளும், 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் 5,09,455 மாணவ, மாணவியர்களுக்கு தலா 4 செட் வீதம் விலையில்லா வண்ணச்சீருடைகளும், வருவாய் ஈட்டும் தாய், தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்தம் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.50,000/-  வழங்கும் திட்டத்தின் கீழ், 208 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.04 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 60 மாணவக் கண்மணிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் 92.95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு அரசு பள்ளிகளுக்கும், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைக்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 194 மாணவ மாணவியர்களும், மன்பஉல் உலூம்  மேல்நிலைப்பள்ளியில் 119 மாணவ மாணவியர்களுக்கும், தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 370 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 683 மாணவ மாணவியர்களுக்கும் ரூ.26.44லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற பள்ளிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. மற்றும்  மாவட்டத்தில் மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி பெற அனைத்துவகை உட்கட்டமைப்பு வசதிகளுடன் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம் கட்டித்தர கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30.00லட்சம் மதிப்பீட்டில் கட்டித்தர பணிகள் மேற்கொள்ளப்படும், இதேபோல் மாணவ மாணவியர்களின் கல்விக்காக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசு தயாராக உள்ளது அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி எல்லோரும் சிறந்து விளங்கிட வேண்டும் என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், அம்மன் கே.அர்ச்சுணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திரசேகரன், மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்