முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்ற கார்ட்டூன் வெளியீட்டால் சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

பெர்லின் : சுதந்திரதேவி சிலையை டொனால்டு டிரம்ப் வெட்டுவது போன்ற கார்ட்டூனை வெளியிட்ட ஜெர்மனி பத்திரிகை விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

பரபரப்பு கார்ட்டூன்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே சர்ச்சைக்குரிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளில் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் ஜெர்மனியின் பிரபல வார இதழ் ‘டெர் ஸ்பைஜெல்’ ஒரு பரபரப்பு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் வெட்டப்பட்ட சுதந்திரதேவி சிலையை ரத்தம் சொட்டும் நிலையில் ஒரு கையில் டிரம்ப் வைத்திருப்பது போலவும், மற்றொரு கையில் ரத்தம் தோய்ந்த கத்தி வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதியுடன் ஒப்பீடு

அமெரிக்க பிணைக் கைதிகளை ஐ.எஸ். பயங்கரவாதி ‘ஜிகாதி ஜான்’ துண்டிக்கும் படம் இதுபோன்று தான் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாதி ஜிகாதி ஜானுடன் டிரம்பை ஒப்பிட்டு தற்போது இக்கார்ட்டூன் வரை யப்பட்டுள்ளது. இப்படத்தை கார்ட்டூன் ஓவியர் ஈடல் ரோட்ரிகுயஷ் வரைந்துள்ளார். ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது என்ற கருத்தை இந்த கார்ட்டூன் சித்தரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உறவில் பாதிப்பு

இந்த கார்ட்டூனை ஜெர்மனியின் சில பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன. இதில் ஒன்றும் சுவாரசியம் இல்லை என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஜெர்மனி துணை தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். ஒபாமா அதிபராக இருந்த போது அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே நல்லுறவு இருந்தது. தற்போது டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு இரு நாடுகளிடையே ஆன உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினையில் டொனால்டு டிரம்ப் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை திட்டி வசைபாடியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago