முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி ஆய்வு நீதிமன்ற கண்காணிப்பு குழு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மேன்மைமிகு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்.ராமசாமி,ஏ.எஸ்.வைகுந்த், எஸ்.எம்.மோகன்காந்தி, கே.கே.சாமி மற்றும் சூரியபகவான்தாஸ் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர்களின் கண்காணிப்பு குழு உடனான கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) இராஜையா தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

 

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் பல முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்திகளின் வாயிலாகவும், உள்ளுர் தொலைக்காட்சிகள் மூலமும், துண்டு பிரசரங்கள் மூலமாகவும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் செய்தித்துறையின் மூலம் இயக்கப்பட்டு வரும் மிண்ணணு வீடியோ வாகனத்தின் மூலமும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வீடியோ படக்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

தூத்துக்குடி மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. குறிப்பாக கனநீர் ஆலை (டேக்), உரம் தயாரிப்பு ஆலை (ஸ்பிக்), அனல்மின் நிலையம், ஸ்டெர்லைட், துறைமுகம், சிப்காட், மருத்துவமனை, டி.சி.டபிள்யூ போன்ற பல தொழிற்சாலைகள் உள்ளன. நீர் நிலைகள் மற்றும் கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவைகள் தவிர அறநிலையத்துறை, ரயில்வேத்துறை, கல்லூரி வளாகங்கள், மற்றும் தனியார் நிலங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே அரசு மட்டும் அல்லாமல் தனியார் பங்களிப்பும் அதிக அளவில் இங்கு தேவைப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புரங்களில் அரசு புறம்போக்கு இடங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் சம்மந்தப்பட்ட வட்டாச்சியர், துணை வட்டாச்சியர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நில பட்டாதாரர்களுக்கு மீண்டும் நோட்டிஸ் அனுப்ப வேண்டும அதனைத் தொடர்ந்து ரோஸ்பார்க் முதல் துறைமுகம், துறைமுகம் முதல் திருச்செந்தூர் சாலை, திருச்செந்தூர் முதல் உப்பாற்று ஓடை, மற்றும் சிப்காட்டில் சுமார் 25 ஏககர் நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றப்பட்ட இடங்கள், பண்டாரம்பட்டி கண்மாய், முல்லிக்குளம் கண்மாய், ஆலமரத்துக்குளத்தில் கருவேல மரங்களை அகற்றப்பட்டு வரும் இடங்கள் மற்றும் மூன்றாவது மைல் பாலம் அருகிலுள்ள பகுதிகள் போன்ற இடங்களை பார்வையிட்ட வழக்கறிஞர்களின் கண்காணிப்பு குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

 

ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் பிச்சை, கோட்டாச்சியர்கள் தியாகராஜன், டாக்டர்.கண்ணபிரான், தூத்துக்குடி மாநகராட்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் லட்சுமணன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், கல்வித்துறையினர், வட்டாச்சியர்கள், உட்பட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்