முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணி ஆற்றில் 400 ஆண்டுகள் பழமையான நந்தி சிலை கண்டெடுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

தூத்துக்குடி.

 

செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் பிரமாண்டமான நந்தி சிலை கிடைத்துள்ளது.

 

துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிராமம் முத்தாலங்குறிச்சி. இந்த கிராமத்தில் தாமிரபரணி வற்றிய போது பிரமாண்டமான நந்தி சிலையின் முதுகு பாகம் தென்பட்டது. முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் நடராஜன் ராட்சத இயந்திரம் கொண்டு வந்து அதைதோண்டி எடுத்தார்.அப்போது பிரமாண்டமான நந்தி சிலை தென்பட்டது. கிராம மக்கள் நந்தியை தூக்கி வந்து ஊர் சந்தியில் வைத்து மாலை அணிவித்து, அபிசேகம் செய்தனர். இது குறித்து நடராஜன் கூறும் போது, தாமிரபரணி ஆற்றில் இதற்கு முன்பு 10 வருடங்களுக்கு இந்த பகுதியில் ஆற்று மணலை அள்ளும் போது இதுபோன்று சிலை தென்பட்டது.ஆனால் பொது மக்கள் சுதாகரிக்கும் முன்பு சிலைகள் மீண்டும் மணல் மூடி விட்டது. தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வற்றியவுடன் இந்த நந்தி சிலை தென்பட்டது. சிலையை ஜேசிபி மூலமாக தூக்கி கொண்டு வந்து ஊரில் பொது இடத்தில் வைத்து வணங்கி வருகிறோம்.

 

நந்தியின் உடலில் பல வேலைபாடுகளை சிற்பி செய்துள்ளார். கால் மடித்து படுத்திருக்கும் காட்சிகள் மிக தத்துபமாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது. எங்கள் ஊரில் வீரபாண்டிஸ்வரர் என்னும் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மிகபிரமாண்டமான பிள்ளையார் கோயில் உள்ளது. அந்த பிள்ளையார் உடலிலும் பூணுால் உள்பட வேலைபாடுகள் மிகச்சிறப்பாக காணப்படுகிறது.அதுபோலவே தற்போது கிடைத்த நந்தியிலும் வேலைப்பாடுகள் காணப்படுகிறது

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் வந்த வெள்ளத்தில் இந்த கோயிலும் அதை சுற்றி இருந்து குடியிருப்பும் அழிந்து விட்டது. அவ்வேளையில் அங்கிருந்த நந்தி, முருகன் வள்ளி தெய்வானை சிலைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. அந்த சிலையில் இந்த நந்தி சிலை ஒன்றாக இருக்குமோ என தோன்றுகிறது. எனவே தொல்லியல் துறையினர் இதை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

நந்தி சிலையில் மூக்கு, காது உள்பட பல இடங்கள் சிதிலமடைந்து உள்ளது. அதை காணும் போது இடைபட்ட காலத்தில் சிற்பி நந்தி சிலை செய்யும் போது சிதிலமடைந்த காரணத்தினால் ஆற்றில் தூக்கி போட்டு விட்டாரோ எனவும் தோன்றுகிறது.தற்போது ஊரில் நந்திசிலை வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அங்கு வந்து பார்வையிட்டு சிலைக்கு பூஜை செய்து, அருகில் உள்ள உண்டியலில் காசுபோட்டு வருகிறார்கள்.ஆற்றுக்குள் கிடந்த நந்தியின் எடை 1 டன் இருக்கும் என பொதுமக்கள் கூறினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago