முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நாளை வருஷாபிஷேகம் விழா

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு காலம்  நிறைவுபெற்றதையொட்டி நாளை செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுவுள்ளது.

 ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி கிழக்குராஜகோபுரம், வடக்கு, தெற்கு, மேற்கு கோபுரங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் மகாகும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதநால் இந்து மரபுப்படி திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டுக்கு பின் வருஷாபிஷேகம் நடத்துவது என்பது ஐதீகமாகும். அதன்பேரில் ராமேசுவரம் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதையொட்டி பிப்ரவரி 7-ம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி இன்று திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் புனித நீர் வைக்கப்பட்ட கலசங்களுக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு 2-ஆம் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து  பின்பு அம்மன் சன்னதி மண்டபத்தில் இருந்து  கலசங்கி வைத்துள்ள புனித நீரை எடுத்து செல்லப்பட்டு பிரகாரத்தை சுற்றி வந்து காலை 10.30 மணியில் இருந்து 12 மணிக்கள் கருவறை சன்னதிகளான ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன், காசி விசுவநாதர், விசாலாட்சி ஆகிய சன்னதிகளில் ஒரே நேரத்தில் புனிதநீரால் மகாஅபிஷேகம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் உதவி கோட்டபொறியாளர் மயில்வாகணன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்களும்,அலுவலர்களும் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்