முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தணிக்கைக்குழுவில் `யு' சான்றிதழை பெற்றது `விழித்திரு' திரைப்படம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் `விழித்திரு' திரைப்படம் தணிக்கைக்குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. 'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'.

கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விழித்திரு' திரைப்படம் தணிக்கை குழுவினரிடம் `யு' சான்றிதழை பெற்றுள்ளது.

"சமூதாயத்தில் நடக்க கூடிய உண்மை நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'விழித்திரு' படத்திற்கு, தணிக்கை குழுவினர் `யு' சான்றிதழ் வழங்கி இருப்பது, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. வரும் பிப்ரவரி ரிலீசாக இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக மீரா கதிரவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்