தொழுநோய் ஒழிப்பு பேரணி: முருகுமாறன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      கடலூர்
murugumaran mla

சிதம்பரம்,

 

காட்டுமன்னார்கோயிலில் இன்று ஆயங்குடி அரசு ஆரம்மப சுகதார நிலையம் மற்றும் இந்திய தொழு நோய் சேவை அறக்கட்டளை இணைந்து நடத்தும் தொழு நோய் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் சிவானந்தம்,திட்ட மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட தொழுநோய் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழுநோய் குறித்து விளக்கு உரைஆற்றி பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் .இவ் முகாமில் மேனாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்ஜிஆர்தாசன், மருத்துவ அலுவலர் சித்ராதேவி, வட்ட வீடுகட்டும் சங்க தலைவர் அசோகன், மாடர்ன் மற்றும் குமார் நர்சிங் கல்லுhரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை ஏற்படுத்தி சென்றனர். உடன் மேற்பார்வையாளர் தம்பா,ஜனார்தனன் ,முருகன், சீனிவாசன், மோகன்குமார், கவியரசன், சௌந்தரராஜன், குணபாரதி முன்னால் வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன்,முன்னால் ஊமதலைவர்கள் பாரதிதாசன், ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: