முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் குறித்த கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்.

 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் குறித்து, கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,., தலைமையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,., செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 

தட்டம்மை ரூபெல்லா நோயினை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பிப்ரவரி 2017 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஒன்பது மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும்.

 

தட்டம்மை என்பது குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் உடலில் தடிப்புடன் வரும் அம்மை வகைகளில் ஒன்று. இந்த அம்மை மற்ற அம்மைகள் போலில்லாமல் நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சு சளி, ஜுரம், தீவிர வயிற்றுப்போக்கு, கடும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அம்மை ஆகும்.

1985-ஆம் ஆண்டு முதல் இந்த தட்டம்மை தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக இதுவரை எந்த பிரச்சனையும் இதனால் வந்ததில்லை. ரூபெல்லா நோயும் அம்மை நோய்களில் ஒரு வகை தான். காய்ச்சல், நெறிக்கட்டி, தடிப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு, இந்நோய் தொற்று ஏற்படும் போது, கருவிற்குள் நோய் கிருமிகள் சென்று கருவை தாக்குகின்றன. இதனால் ஊழபெநnவையட சுரடிநடடய ளுலனெசழஅந எனப்படும் பிறவி குறைபாடு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும். இந்த ஊழபெநnவையட சுரடிநடடய ளுலனெசழஅந நோய் கிட்டத்தட்ட வருடத்திற்கு ஒரு இலட்சம் குழந்தைகளை பாதிக்கிறது. இதனால் காது கேளாமை, பிறவி கண் புரை, இருதயத்தில் ஓட்டை மூளை வளர்ச்சி குறைபாடு, கல்லீரல் மற்றும் இரத்தம் சார்ந்த கோளாறுகள் என்று பல பிரச்சனைகள் பிறக்கும் முதலே இந்த குழந்தைகளுக்கு இருக்கும்.

 

இந்த தடுப்பூசியை கர்ப்பிணிகளுக்கு போட இயலாது. குழந்தைகளுக்கு போட்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தினால்தான் வருங்காலத்தில் குறைகளோடு குழந்தைகள் பிறப்பதை தடுக்க இயலும். இந்தியாவில் இன்னும் வருடத்திற்கு, கிட்டத்தட்ட 15,000 முதல் 20,000 குழந்தைகளுக்கு இந்நோய் வருவதாக புள்ளிவிரவம் தெரிவிக்கின்றது.

 

ஆஆசு எனும் தடுப்பூசி தனியார் மருத்துவர்களிடம் மட்டுமே போடப்பட்டு வந்தது. 1990-ல் இருந்து இந்த தடுப்பூசி இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இப்போது அரசே இலவசமாக தட்டம்மை, ரூபெல்லா நோய்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த ஆஆசு தடுப்பூசியை போடவுள்ளது. ஒரே சமயத்தில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியினை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்குவதால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு நோய் பரவுவதையும் தடுக்க முடியும். தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நடத்தப்படுகிறது.

 

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி வழங்குவது மட்டுமே சரியான தீர்வாகும். ஒரே தடுப்பூசியில் இரண்டு உயிர் கொல்லி நோய்களான தட்டம்மை மற்றும் ரூபெல்லாவிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதைத் தடுக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அவர்களது குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுகொள்ளுமாறு கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,., தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஜெமினி (கள்ளக்குறிச்சி), டாக்டர்.சௌண்டம்மாள் (விழுப்புரம்) மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்