முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

10-ம் தேதி தேரோட்டம்

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருகின்ற  10-ம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நாள் முதல் மகா தரிசனம் வரை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் பந்தல் வசதி, குடிநீர் வசதி, அன்னதானம் வழங்குதல் உட்பட பல்வேறு வசதிகளையும், சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி-தெய்வானை கோவில் மற்றும் சித்தர் கோவில் வரை மாவட்ட கலெக்டர்       டாக்டர்.எஸ்.பிரபாகர்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தைப்பூச திருவிழா

தைப்பூச திருவிழாவிற்கு வருகைபுரியும் பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கும், ஆங்காங்கே பக்தர்கள் வரும்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்றும், திருவிழா காண வருபவர்களுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும், கூடுதல் பேருந்துகள் எவ்வளவு இயக்கப்படவுள்ளது என்றும், ஆங்காங்கே கழிவறை மற்றும் குடிநீர் வசதி போதுமான அளவிற்கு செய்யப்பட்டுள்ளதா என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.

இவ்விழா ஏற்பாடுகளை இத்திருக்கோயில் செயல் அலுவலர் அருள்குமார்  ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த ஆய்வுகளின்போது, இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ப.முருகைய்யா, ஈரோடு மாவட்டத்திற்கு பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் செல்வி.பிரியங்காஆலா, செல்வி.அங்கர் லேதர், அபிஷேக் மீனா, டி.எஸ்.சேத்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்