முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணூர் பகுதியில் கஞ்சா விற்ற தாய், மகன் உட்பட 3 பேர் கைது.

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      சென்னை

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ்,  உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  அதன்பேரில், காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்றுமுன் தீனம்   (04.02.2017) மதியம் சுமார் 02.15 மணியளவில், அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகர் அருகில் உள்ள புதர் அருகே ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த 2 பெண்கள் மற்றும் ஒரு நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் அருகில் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.  அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த  செல்வழகி (45),  சுனாமி குடியிருப்பு, எண்ணூர்,  இவரது மகன் குப்புராஜ்(26), சுனாமி குடியிருப்பு, எண்ணூர்,  மற்றும் சின்னமூஞ்சி (எ) பத்மா (37),சுனாமி குடியிருப்பு, எண்ணூர்,  ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 4 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட செல்வழகி, பத்மா மற்றும் குப்புராஜ் ஆகியோர் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்