முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலையார் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயில் 5 பிரகாரங்களில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், பே  கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், கிளி கோபுரம் உட்பட 9 கோபுரங்களை  கொண்டது. அண்ணாமலையார் கோயில் குடமுழுக்கு விழா என்பது கடந்த ஒரு  நூற்றாண்டில் 3 முறை நடைபெற்றுள்ளது. அதில், கடைசியாக கடந்த  27-06-2002-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து 14   ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது.   பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள அண்ணாமலையார் கோயில் குடமுழுக்கு  விழா திருப்பணிகள் ரூ.7.19 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது.   இதுவரை மொத்தம் 138 பணிகள் நடைபெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் கூறுகிறது.   திருப்பணிகள் பெருமளவில் நிறைவுபெற்றதை அடுத்து காவல் தெய்வமான துர்க்கை  அம்மன் உற்சவத்துடன் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 26-ம் தேதி  தொடங்கியது. பின்னர், பிடாரி அம்மன் உற்சவம் மற்றும் சிறப்பு ஹோமங்கள்  அடுத்தடுத்து நடைபெற்றது.  இதையடுத்து, 108 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில் 12 கால யாகபூஜைகள் கடந்த 31-ம் தேதி மாலை தொடங்கியது. பின்னர் மறுநாளில் இருந்து நேற்று  (5-ம் தேதி) மாலை வரை காலை மற்றும் மாலையில் என்று இரண்டு யாக பூஜைகள்  நடைபெற்றது. இதற்கிடையில் பரிவார மூர்த்திகளுக்கு கடந்த 2-ம் தேதி காலை  குடமுழுக்கு விழா நடைபெற்றது.   இதைத்தொடர்ந்து 12-வது கால யாக பூஜை வரும் இன்று (6-ம் தேதி) அதிகாலை 3   மணிக்கு நடைபெற்றது. பின்னர் மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம் நடைபெற்றதை  தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெறுகிறது. சுக்ல பக்ஷம், தசதி திதி, ரோஹிணி  நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.05 மணிக்கு மேல்  10.30 மணிக்குள் மகா குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. மூலவர், அம்மன்  மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் உள்ள கலசங்கள் மீது வேத  மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் சிவாச்சாரியார்கள் புனித நீரை  ஊற்றுகின்றனர். அதன்பிறகு, 6 நாட்களுக்கு (31-ம் தேதியில் இருந்து சாமி  தரிசனம் ரத்து) பிறகு சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள்  அனுமதிக்கப்படுகிறார்கள்.  பின்னர் இன்று மாலை மகா அபிஷேகம் மற்றும்  திருக்கல்யாணம் கழ்ச்சியைதொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா இரவு  நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago