முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம்:அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில்  உயர்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:-தருமபுரி மாவட்டத்தில் சென்ற ஆண்டு வடகிழக்குப்பருவ மழை பொய்த்ததினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உள்ளது. ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தின்கீழ் வார்டுகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கண்டறியப்பட்டு உடனுக்குடன் குடிநீர் வழங்கவும், குடிநீர் மோட்டார்கள் பழுதடைந்திருந்தால் உடனடியாக பழுதை சரிசெய்து தீர்வு காணவேண்டுமென ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க 222 குடிநீர் பணிகளுக்கென ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் சென்ற ஆண்டுகளில்  பல திட்டங்களின் மூலம் குடிநீர் பணி செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை முடிப்பதன் மூலம் குடிநீர் பற்றாக்குறைகளை குறைக்க முடியும். பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். வேறு பணிகள் குளிப்பது, துவைப்பது போன்ற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் என பிரத்தேயமான ரூ. 2.00 இலட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மொத்தம் 276 ஊரக உள்கட்டமைப்பு இடைநிரவல் 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டு நிதியில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 247 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நடப்பாண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மின்மோட்டார் கொண்டு நீரினை வீடுகளில் பம்ப் செய்பவர்கள் அதிகளவில் மோட்டார்கள் மூலம் குடிநீர்களை உறிஞ்சி சட்டத்திற்கு புறம்பாக சேகரித்து வருபவர்களால் பெரிதும் பொதுமக்கள் பாதிப்புள்ளாகிறார்கள்.   மாவட்டத்தில் இத்தகைய செயலினால் குடிநீர் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இத்தகைய செயல்களை செய்பவர்களை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கண்டறியப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  தெரிவித்தார்.  இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  அ. சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  எம். காளிதாசன்,  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  விமலாதேவி, உதவி இயக்குநர் (தணிக்கை)  பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  இரா. சண்முகசுந்தரம், கோட்டாட்சியர்  இராமமூர்த்தி,  நகராட்சி ஆணையாளர் (பொ)  குணாளன் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago