முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள்: அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் , எஸ்.வளர்மதி வழங்கினர்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      திருச்சி

திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி  ஆகியோர் வழங்கி மரக்கன்று நடும்பணியை தொடங்கிவைத்தார்கள்.நிகழ்ச்சிக்கு கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் முன்னிலை வகித்தார்.  அமைச்சர்  பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தெரிவித்ததாவது: புரட்சித்தலைவி அம்மா  பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கிவைத்தார்கள். இதன் மூலம் வனத்துறை தனியார் நிலங்களில் மரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்ப்பது அவசியமான ஒன்றாகும்.இயற்கை வளம் பெருகவும், மாறிவரும் காலச் சூழ்நிலைகளால் மாசுபடும் சூழலை சீர்செய்திடவும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும் நம் எதிர்கால சந்ததியினருக்கு மாசில்லா உலகினை அளித்திடவும் நாம் தற்போது உடனடியாக முனைப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஓர் சீரிய முயற்சியாக நமது மாவட்டத்தில் தூய்மையான காற்றினை அளித்திடும் மரங்களின் எண்ணிக்கையை பெருக்கிட பசுமையான இயற்கை சூழலுடன் கூடிய திருச்சி மாநகரை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் குறைந்தபட்ச பராமரிப்பில் விரைவாக வளர்ந்து நிழல் தரக்கூடிய புங்கன், வேம்பு, வாகை, மகாகனி, வாதாம், போன்ற மர வகைகள் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடவு செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள,; பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியோரின் பங்களிப்போடு இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அகற்றப்பட்ட இடங்களில் பயன்தரும் மரக்கன்றுகளை நடும்பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் முதற்கட்டமாக நேற்று (04.02.2017) பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றிட தங்களின் பங்களிப்பை வழங்கிட ஆர்வமுள்ள அனைவரும் இலவசமாக மரக்கன்றுகளை பெற்று பராமரித்திட மாவட்ட நிர்வாகத்தை 74027 04803 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், வருவாய் கோட்டாச்சியர்கள் கணேஷ்குமார் (திருச்சி), ஏ.ஜி.ராஜராஜன் (ஸ்ரீரங்கம்), மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் முத்துவடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, அமராவதி கூட்டுறவு வங்கித்தலைவர் பத்மநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், வட்டாட்சியர்கள் ரெங்கராஜன், சத்தியமூர்த்தி, சண்முகராஜசேகரன், முன்னாள் மாநகராட்சி மேயர் அ.ஜெயா, முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், முன்னாள் கோட்டத்தலைவர் மனோகரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அழகேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மலைக்கோட்டை ஐயப்பன், கார்த்திக்கேயன், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்