முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

  தேனி - தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நடைபெற்ற பொது மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாசலம், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களை பாதுகாத்திடும் பொருட்டும், குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து உரிய பாதுகாப்பு அளித்திடும் பொருட்டு வட்டார அளவில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், இளைஞர் நீதி குழந்தைகளின் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் சட்டம், குழந்தை தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம், குழந்தை திருமணம் தடை செயல் சட்டம், குழந்தைகள் சேவை அமைப்பு (சேவை அமைப்பு எண்:1098) ஆகிய விழிப்புணர்வு தலைப்புகள் கொண்ட கலை நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம், கூத்துகள் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர்  செ.பொன்னம்மாள்   மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) திருமதி.வி.ரோஸ்லின்  சைல்டுலைன் இயக்குநர் முகமது சேக் இப்ராஹீம்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்