முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலாவுக்கு சரத்குமார் வாழ்த்து

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - அ.தி.மு.க. சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, ஒருமனதாக அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை முன்மொழிந்து, மேலும் அவர் முதல்வராவதற்கு வழி வகுத்த முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், இவர் கருத்தை ஆதரித்த சட்டசபை உறுப்பினர்களுக்கும், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பாதையில் எந்த குழப்பத்திற்கும் இடம் கொடாமல் ஒற்றுமையாக செயல்பட்டு எடுத்த முடிவிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago