முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மத்திய அரசின் ரயில்வே தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும்,36அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் திருமங்கலம் ரயில் நிலையம் முன்பாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் சிவகாசி கிளை சார்பில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தொழிலாளர்கள் மத்தியில் பிளவை உண்டாக்குதல்,பாதுகாப்பு என்ற பெயரில் சூப்பர்வைசர்களின் தொழிற்சங்க உரிமைகளை பறித்தல்,நீலகிரி,சிம்லா,டார்ஜிலிங் மலைரயில் போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்க்க திட்டம்,லாபத்தில் இயங்கிடும் ஐ.ஆர்.சி.டி.சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம்,ஊதிய முரண்பாடுகள் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடவேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்,2.5லட்சம் சேப்டி பிரிவு காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்,உளுத்துப்போன ரயில் தண்டவாளங்களை உடனே மாற்;றிட வேண்டும்,25ஆண்டுகளுக்கும் மேலாக ஓடும் கோச்சுகளுக்கு பதிலாக புதிய கோச்சுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தின் சார்பில் நேற்று நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

திருமங்கலம் நகர் ரயில் நிலையம் முன்பாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சிவகாசி கிளையின் சார்பில் மேற்கண்ட 36அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாசி கிளை செயலாளர் இ.ஜெயபால் தலைமை வகித்தார்.தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.இதில் கிளை நிர்வாகிகள் முத்துவேல்,சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago