தோவாளை வட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
02

கன்னியாகுமரி,

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தோவாளை வட்டத்தில், சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

 

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், பாசன வாய்க்கால்கள், சாலையோரங்கள் மற்றும் தனியார் நிலங்களில் இயற்கையாகவே வளர்ந்து வரும் சீமைக்கருவேல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், அவற்றை அகற்றிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சென்னை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கு று.P.16485ஃ2015, 16645ஃ2015 ஆகியவற்றின் தீர்ப்புரையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பின்வருமாறு ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

 

அரசு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல்; மரங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொண்டு சீமைக்கருவேல்; மரங்களை வேருடன் அகற்றிட வேண்டும் எனவும், தனியார் நிலங்களில் ஃ பட்டா நிலங்களில் வளரும் சீமைக்கருவேல்; மரங்களைப் பொறுத்த வரை, இம்மரங்கள் தானாகவே வளரக் கூடியவை என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதாலும், சுகாதார பாதிப்புகள் உண்டாக்குவதாலும், இவற்றை வேருடன் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொது மக்களுக்கு இதனை விளம்பரபபடுத்துமாறும் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தோவாளை வட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில், நான்கு வட்டங்களில் ஒன்றான, தோவாளை வட்டத்தில், பட்டா நிலங்களில் உள்ள சீமைகருவேல் மரங்களை 24 சதவீதம் அகற்றப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் உள்ள சீமைகருவேல் மரங்கள் 23.44 சதவீதம் அகற்றப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை (தோவாளை) அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. ஆய்வின் போது, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ராஜ்குமார், தோவாளை வட்டாட்சியர் ப. சாரதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: