தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரைகள்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      மாணவர் பூமி
manaver

Source: provided

1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் எனும் கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது.

2. மாணவர்கள் அரசுத் தேர்வில் வெற்றிபெற தவறிவிட்டாலோ அல்லது குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாலோ அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக திட்டித் தீர்ப்பதை நாம் பார்க்கிறோம். இதனால் தோல்வியுற்ற மாணவர்கள் கடும் சோர்வடைந்து, மனமுடைந்து இறுதியில் தற்கொலைக்குச் செல்கிறார்கள். அதைவிடுத்து குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கு என்ன காரணம் என்று ஆராயுங்கள். அந்த குறைகளை களைய முற்படுங்கள்.

3. பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை அவர்களின் சக நண்பர்களோடு ஒப்பிட்டு குத்திக் காட்டி பேசாதீர்கள். 'நீ என்ன மார்க்கெடுத்து கிழிச்சிருக்கிறாய், அதோ அந்த பிள்ளைய பாரு' என்ற வார்த்தைகள் உங்கள் பிள்ளைகளை தாழ்வுமனப்பான்மையை நோக்கி இட்டுச் செல்லும். இறுதியில் அந்த நண்பரை வெறுக்கும் நிலைக்கு கொண்டு சேர்க்கும்.

4. மாறாக உங்கள் பிள்ளைகளை உற்சாகப் படுத்துங்கள். அவர்களுக்கு தோளோடு தோள் நின்று உதவுங்கள். விடியற்காலையில் எழுந்து படி என்று சொல்வதற்குப் பதிலாக நீங்கள் தேநீர் போன்ற பானங்களை தயாரித்து கொடுத்துவிட்டு 'பார்த்தாயா நீ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காகவே உன்னோடு நானும் இந்த அதிகாலையில் விழித்திருக்கிறேன்' என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அடையும் உற்சாகம் அளவில்லாமல் இருக்கும்.

5. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள், உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வி வாழ்க்கையை நிர்னயிக்கும் ஒரு முக்கிய கட்டம் என்பதை உணருங்கள். பெற்றோர்களே இந்த ஒரு மாதமாவது உங்கள் வீட்டு தொலைக்காட்சியை அனைத்து போடுங்கள். மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தொல்லை தரும், பிறகு அவர்களிடம் எப்படி நீங்கள் அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

தேர்வுகள் எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள்:

மாணவ மாணவிகளே! நீங்கள் எவ்வாறு தேர்வு எமுதவேண்டும், இருநூறுக்கு இருநூறு எப்படி எடுப்பது, உங்களுக்காக தரப்பட்டுள்ள அந்த 3 மணி நேரத்தை எப்படி பயன்படுத்துவது போன்ற அபரிமிதமான தகவல்கள் உங்கள் பள்ளி ஆசிரியர்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் உங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பாக நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

1. உங்கள் பெற்றோர்கள் மற்றும் அசிரியர்களின் தியாகங்களை சற்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்கள் படும் கஷ்டங்கள்தான் எத்தனை எத்தனை. அது மட்டுமா உங்களை உற்சாகப்படுத்தி உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எத்துனை எத்துனை சங்கங்கள் எத்தனை சமுதாய ஆர்வலர்கள், அதற்காக எவ்வளவு உடல் உழைப்புகள், எவ்வளவு பொருளாதார செலவுகள் செய்யப்படுகின்றன என்பதை உணருங்கள். இத்தனையும் தாண்டி நீங்கள் தேர்வில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்து வந்தால் உங்களுக்காக உழைத்தவர்களுக்கு செய்யும் நன்றிக் கடன் இதுதானா? உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நீங்கள் அல்லவா முதலில் அக்கரை எடுக்கவேண்டும்.

2. அரசுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு பெரும் சவாலாக தற்போது வந்திருப்பது கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள். மாணவிகள் இவற்றை பார்ப்பது குறைவுதான் என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் அதில் வீழ்ந்துகிடப்பதை பார்க்கிறோம். மாணவர்களே நீங்கள் டிவியில் விளையாட்டு போட்டிகளை தேர்வுகாலத்தில்கூட பார்த்துக்கொண்டிருந்தால் உங்களைவிட பெரும் நஷ்டவாளிகள் யார் இருக்க முடியும்?

3. மாணவிகள் மட்டும் என்ன எந்தவித தொந்தரவும் இல்லாமல் படிக்கமுடிகிறதா? அவர்களின் படிப்புகளில் தடை வைக்கும் முகமாக தெருக்களில்,வீதிகளில் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள். அலறும் மைக்செட்டுகள் இதற்கு மத்தியில்தான் மாணவிகளே நீங்களும் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது.

4. அரசு தேர்வு எழுதவிருக்கும் மாணவ மணவிகளே! தேர்வை எண்ணி நீங்கள் பதட்டப்படாதீர்கள், இறைவனை வழிபட்டு தேர்வு எழுதச்செல்லுங்கள். தேர்வு எழுத ஆரம்பிக்கும் போது கடவுள் உங்களுக்கு ஞாபக சக்தி கொடுத்து உதவுவார்.

5. முதலில் கேள்வித்தாளை ஒன்றுக்கு இருமுறை படித்துப் பாருங்கள். விடைகளில் தவறு ஏற்பட்டால் அதை அடித்து அடித்து எழுதாதீர்கள். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். சற்று யோசனை செய்துதான் விடை எழுத முடியும் என்ற, சிறு கேள்விகளுக்கு விடைதாள்களில் அதற்கான இடத்தை விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு விரைவாக செல்லுங்கள்.

6. நீங்கள் வழக்கமாக பயன்படுத்திடும் பேனா பென்சில்களையே தேர்வு எழுதுவதற்கும் பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. தேர்வு எழுதியவுடன் நீங்கள் எழுதியது சரிதானா?என்பதை இறுதியில் மறுபடியும் படித்துப்பாருங்கள்.

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: