முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி அஷாருக்கு தடைவிதிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க், தீவிரவாதி அஷாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கவும் அவன் சுதந்திரமாக உலாவ தடைவிதிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானநிலையத்தை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. இந்த இயக்கத்தின் தலைவர் அஷார், தற்போது பாகிஸ்தானில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளான். அவனை சர்வதேச பங்கரவாதியாக அறிவிக்க கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை சீனா எதிர்த்ததால் தீர்மானம் நிறைவேறாமல் போய்விட்டது. அஷாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவும் அவனது சொத்துக்களை முடக்கவும் அமெரிக்கா மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் மீண்டும் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து ஆலோசனை செய்து அஷாரை சர்வதேச தீவிரவாதி என்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமானது தீவிரவாத இயக்கம் என்றும் அதன் தலைவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்