முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் சார்பில் சீமை கருவேல மரங்கள்அகற்றும் பணி : கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூரில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (07.02.2017) நேரில் பார்வையிட்டார்.

 

கருவேல மரங்கள்

 

சீமை கருவேல மரங்கள் அகற்றுவதை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பொது மக்களின் பங்களிப்போடு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் ஆகியோர்களுடன் ஒருங்கிணைத்து "அகற்றுவோம் அகற்றுவோம் கருவேல மரங்களை வேரோடு அகற்றுவோம்" என்ற முழக்கத்தோடு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் சார்பில் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 4,20,000 சதுர பரப்பளவில் 95 சதவிகித சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களிலும் கணக்கெடுப்பு பணி மற்றும் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. 10.02.2017க்குள் வீட்டு மனை மற்றும் விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றாமல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அகற்றி அதற்கான செலவினத் தொகை இரு மடங்காக வசூலிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, கிளின் தஞ்சாவூர் மற்றும் பெரியார் பல்கலைகக் கழக மாணவ மாணவியர்கள் இணைந்து தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மாணவ மாணவரியர்களிடம் மாவட்ட கலெக்டர் மாணவ மாணவியர்கள் இப்பணியில் ஈடுபடுவது பாராட்டத்தக்கதாகும். நீங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். வாட்ஸ்ஆப், முகநூல் போன்றவற்றில் சீமை கருவேல மரங்களால் எற்படும் தீமைகள் தொடர்பாக செய்திகள் அதிகம் பகிர்ந்து, இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது ரோட்டரி சங்கத் தலைவர் குபேந்திரன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் சிங்காரவேலன், கோவிந்தராஜன், திரு,சுகுமாறன், அறிவானந்தம், செயலாளர் சண்முகம், சீனிவாசபுரம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் பன்னீர்செல்வம், டாக்டர் செந்தமிழ் பாண்டியன் மற்றும் பொது மக்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்