முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் நஞ்சப்பா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி,   தொடங்கி வைத்தார்கள்.

கருத்தரங்கு

        கருத்தரங்கினை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர்  பேசியதாவது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில் நமது மாவட்டத்தில் 22 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் சுமார்  280 மாணவ, மாணவியர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறவும் 10-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், 12-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், மருத்துவம்,  மருத்துவம் சார்ந்த படிப்புகள், தொழில் படிப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காகவும், தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காவும் நமது மாவட்டத்தில் முதன் முதலாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக இத்தகைய  தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருவத்தில் பயிர் செய் என்ற அடிப்படையில் பள்ளியில்  பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வியே தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகும்.  மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.  இதனை நாம்  நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த குறிக்கோளுடன்  சரியான முறையில் மேற்படிப்பினை தேர்ந்தெடுத்து  தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

              இந்நிகழ்வின்போது,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பழனியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூ.காளிமுத்து, விடுதி காப்பாளர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள்  பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்