முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்தியாவை சுத்தமாக்கும் : பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தூய்மை இந்தியா போன்றே  பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் இந்தியாவை சுத்தமாக்கும் என்று பண மதிப்பிழப்பு நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்பட்டது குறித்து மக்களவையில் நேற்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

ஜன சக்தி மீது நம்பிக்கை
மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்திய விடுதலைக்கு உயிர் தியாகம் செய்யாத என்னைப்போன்று பலர் இன்றும் தேசத்திற்காகவே வாழ்ந்து, தேசத்திற்காக சேவை புரிந்து வருகின்றனர். காலப் போக்கில் எப்படியோ ஜன சக்தி மறக்கடிக்கப்பட்டு விட்டது, இதனை நாம் ஏற்கக் கூடாது.  நம் மக்களின் உள்ளார்ந்த வலிமை புதிய உயரத்துக்கு இந்தியாவை எடுத்துச் செல்லும் என்பதை நாம் புரிந்து கொண்டு இதனை நாம் பாராட்ட வேண்டும்; ஜனசக்தி மீதான நம்பிக்கை நல்ல பலன்களை தரும்.

நாட்டின் நலன்
சுத்தத்தையும் அரசியலாக்கிய சிலரை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஏன் நாம் ஒன்றாக சேர்ந்து பாரதத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள கூடாது. நாங்கள் அனைத்தையும் அரசியலுக்காக செய்வதில்லை. நாட்டின் நலன் மட்டுமே எங்களின் முழு விருப்பம் ஆகும்.

பண மதிப்பு நீக்க...
பண மதிப்பு நீக்கத்தை பொருத்த வரை நல்ல பொருளாதாரம் தேவை பட்டது அதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். நம் உடல் நன்றாக இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதே போன்று நம் பொருளாதாரம் நன்றாக இருக்கும் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே பண மதிப்பு நீக்க நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்பட்டது.  

ஊக்குவிக்கும்
தூய்மை இந்தியா போன்றே பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் இந்தியாவை சுத்தமாக்கும் முயற்சியே ஆகும். இந்தியாவில் கருப்பு பணம் மற்றும் ஊழலற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்க இது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்