முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் சமுதாய நீர்பாசன அமைப்பு செயல்படுத்துவது தொடர்பாக பங்குதாரர்கள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட ஆட்சியத்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் சமுதாய நீர்பாசன அமைப்பு செயல்படுத்துவது தொடர்பாக பங்குதாரர்கள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   நடைபெற்றது.

நுண்ணீர் பாசனம்

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தெரிவித்ததாவது,கால்வாய் மற்றும் ஆற்றிலிருந்து நீரினை எடுத்து வந்து நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்வது தொடர்பான சமுதாய நீர் பாசன அமைப்பினை எவ்வாறு செயல்படுத்துவது, எந்தெந்த இடங்களில் செயல்படுத்துவது போன்ற விவரங்கள் விவாதிக்கப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் நோக்கம், திட்டத்தின் அவசியம் மற்றும் முறைகள் குறித்து கூறப்பட்டது. இறுதியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கூறிய அறிவுரையில்  டுடீP ஆயக்கட்டு, தடப்பள்ளி - அரக்கன் கோட்டை, காளிங்கராயன் கால்வாய் பகுதி மற்றும் மேட்டூர் வலதுகரை பகுதிகளில் சமுதாய நீர் பாசன அமைப்பினை செயல்படுத்த திட்ட வரைவுகள் தயாரித்து அரசுக்கு பரிந்துரைக்கலாம் எனத் மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் ஜெயின் நுண்ணீர் பாசன நிறுவனம், நெட்டாபிம் நுண்ணீர் பாசன நிறுவனம் மற்றும் ஈபிசி நுண்ணீர் பாசன நிறுவனங்களைச் சார்ந்த அதிகாரிகள் தங்களது நிறுவனங்களின் மூலம் சமுதாய நீர்பாசன அமைப்பு திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட முறைகள், அதன் மூலம் பயனடைந்த நிலப்பரப்பு, விவசாயிகள் விபரம், திட்டத்தின் பயன்கள் ஆகிய விபரங்களை பவர் பாயிண்ட் மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

விரிவான அறிக்கை

இக்கூட்டத்தில் நீர் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர்.டீ.து.பாண்டியன்  திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை தயாரிக்கும் பொழுது மண்ணினுடைய நீர் சேகரித்து வைக்கும் தன்மை போன்றவற்றை கணக்கில் கொண்டு திட்ட அறிக்கையினை தயாரிக்கலாம்  என்றார்.இக்கூட்டத்தில் மேட்டூர், வலது கரை வாய்க்கால் விவசாயிகள் சங்கத் தலைவர் அ.மோகன்  திட்டத்தினை அனைத்து  பகுதிகளிலும் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு அதற்குபின் இந்த திட்டத்தினை அனைத்து பகுதிகளுக்கு விரிவுபடுத்தும் வகையில் திட்ட வரைவுகள் தயாரிக்க வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில்,  தோட்டக்கலை துணை இயக்குநர் ப.தமிழ்செல்வி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், விவசாய பெருமக்கள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பொதுபணித்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு நுண்ணீர் பாசன நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்