முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் வரும் 22-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம் திரளாக கலந்து கொள்ள இருபால் இளைஞர்களுக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      நீலகிரி

ஊட்டியில் வரும் 22_ந் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் இருபால் இளைஞர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                                       வேலைவாய்ப்பு முகாம்       

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் வேலையற்ற ஆண், பெண் இருபால் இளைஞர்களுக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கம் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வரும் 22_ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்.

                              இருபால் இளைஞர்கள்

இது தொடர்பான இதர விவரங்கள் தேவைப்படுவோர் இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், யூஎஸ்எஸ்எஸ் வளாகம், சஞ்சய் ஹோட்டல் பின்புறம், சேரிங்கிராஸ், ஊட்டி_1. 0423_ 2444430 என்ற முகவரியில் அணுகி தெரிந்து கொள்ளலாம். எனவே நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா இருபால் இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago