முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் இல்லை

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      நீலகிரி

ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் இல்லை என நகர வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அச்சங்க தலைவர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

                                     கடை உரிமையாளர்களுக்கு கடை-

கடந்த மூன்று மாதங்களாக வியாபாரிகளின் கடைகள் ஏலம் மற்றும் வாடகை உயர்வு பிரச்சனைகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசு உதவியுடன் முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் சூழ்நிலைகள் எவ்வாறு உள்ளது என்பது ஊட்டி நகர வியாபாரிகள் அனைவரும் அறிந்ததே. இந்த காரணங்களால் சற்று தள்ளி போவதுடன் ஏலம் விடும் நிலையை முழுமையாக நிறுத்தியதுடன் கடை உரிமையாளர்களுக்கு கடை என்ற நிலையை சங்கத்தார் ஏற்பாடு செய்துள்ளனர்.

                               கடையடைப்பு இல்லை

மேலும் அரசு ஆதரவுடன் இந்த மாதத்தில் கடைபிரச்சனை முடிவுக்கு வரும் ஒரு நல்ல சூழ்நிலை இருப்பதால் அரசாங்கத்தையோ, நகராட்சியையோ எதிர்த்து கடையடைப்பு அல்லது போராட்டம் எதுவும் ஊட்டி நகர வியாபாரிகள் சங்கத்தால் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்