முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரர் உடலுக்கு கலெக்டர் மலர்வளையம் வைத்து மரியாதை

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- பனிச்சரிவில் சிக்கி  உயிரிழந்த ராணுவவீரரின் உடலுக்கு ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், அ.புனவாசல்  கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திருப்பாண்டி என்பவர் இந்திய நாட்டின் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக கடந்த 06.02.2017 அன்று உயிரிழந்தார். அவருக்கு திருகனகவள்ளி என்ற மனைவியும், திருசத்யகாயத்ரி (5 வயது) என்ற மகளும், ஹரித் பாண்டி ( 3 வயது) என்ற மகனும் உள்ளனர். தமிழ்நாடு அரசு மூலம், இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த இராணுவ வீரர் திருப்பாண்டி குடும்பத்தாருக்கு நிவாரண உதவித்தொகையாக கார்கில் நிவாரண நிதியின் கீழ் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், தமிழ்நாடு அரசு சார்பாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், அ.புனவாசல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் திருப்பாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி,  அதன்பிறகு அன்னாரது மனைவி கனகவள்ளியிடத்தில் நிவாரண உதவித்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினார்.  

இந்நிகழ்வின் போது கோயம்புத்தூர் மண்டல ராணுவ பிரிவு கமாண்டர் கேப்டன்.எஸ்.பி.சிங், முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் மேஜர் விஜயகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இன்பமணி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்