முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மீத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி வகுப்பு:கலெக்டர் கே.விவேகானந்தன், துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில திட்ட ஆணையம் மற்றும் சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு மீத்திறன் மிக்க மாணவ, மாணவியர்களுக்கு கற்றல் மேம்படுவதற்கான சிறப்பு ஊக்குவித்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் கே.விவேகானந்தன், துவக்கி வைத்து தெரிவித்ததாவது :-தமிழ்நாடு அரசு மாநில திட்ட ஆணையம் மற்றும் சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10-ம் வகுப்புகளில் பயிலும் மீத்திறன் மிக்க மாணவ, மாணவியர்களுக்கு கற்றல் மேம்படுவதற்கான சிறப்பு ஊக்குவித்தல் பயிற்சி வகுப்பு (ஆழவiஎயவழைn ஊடயளள) நடைபெற்றது. இப்பயிற்சி துவக்க விழாவில் நமது மாவட்டத்தில் அனைத்து மீத்திறன் மிக்க மாணவ, மாணவியர்கள் இப்பயிற்சியினை நல்லமுறையில் பயன்படுத்தி இந்த ஆண்டில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திற்கு நற்பெயர் ஏற்படுத்த வேண்டும் எனவும், மேலும் மாணவ, மாணவியர்களுக்கு இப்பயிற்சியின்போது வழிகாட்டி ஏடுகள் வழங்கப்படும். இச்சிறப்பு வகுப்பின் மூலமாக உயர்கல்வி படிப்புக்கு செல்லும் மாணவ, மாணவியர்களின் விழுக்காடு இந்திய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பாக இருப்பதாகவும், இப்பயிற்சியில் அனைத்து பாடத்திற்கும் மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருவதாகவும், மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவ, மாணவியர்களுக்கு உள்ள சந்தேகங்கள் பாட வல்லுனர்களால் நிவர்த்தி செய்யப்பட்டது. தேர்வு எழுதும் முறை பற்றியும், நேர மேலாண்மை பற்றியும் மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது பற்றியும் மாணவர்களுக்கு தெளிவாகவும், மாணவ, மாணவியர்களுக்கு மனக்குவிப்புக்காக பாரதிபுரம் மனவளக்கலை மற்றம் சார்பில் யோகா பயிற்சியும் வழங்கப்படுகிறது என கலெக்டர் கே.விவேகானந்தன். தெரிவித்தார். இப்பயிற்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சி. இராசசேகரன், பெரியாம்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலைக்கல்வி) கோவிந்தசாமி, பள்ளித்துணை ஆய்வாளர் சீனிவாசன், வெள்ளோலை தலைமை ஆசிரியர் கேசவக்குமார், பேளாரஅள்ளி தலைமை ஆசிரியர் ராம்பிரசாத், ஏரிமலை தலைமை ஆசிரியர் தாமோதரன், பூவல்மடுவு தலைமை ஆசிரியை இரமாதேவி மற்றும் எட்டிக்குட்டை தலைமை ஆசிரியர் சரஸ்வதி உட்பட பள்ளி மாணவர்கள் பலர் உள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்