முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

92சதவிகித மக்களுக்கு நலஉதவிகள்: கோட்டாச்சியர் முருகேசன் வழங்கினார்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      வேலூர்

அரக்கோணம்:   92 சதவிகித மக்களுக்கு அரசின் நலஉதவிகளை  மனுநீதி நாள் முகாமில் வருவாய் கோட்டாச்சியர் பா.முருகேசன் வழங்கினார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, பள்ளுர் ஊராட்சி கிராம பள்ளி ஒன்றில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு வந்தவர்களை அரக்கோணம் தாசில்தார் குமரவேல் வரவேற்று பேசினார்.     சமூக பாதுகாப்பு தனி வட்டாச்சியர் பாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜசோழன், முன்னிலை வகித்தும், தோட்டக்கலை அலுவலர் பிரேமா, வேளாண்மை துறை அலவலர், மருத்துவ துறை உள்ளிட்ட அலுவலர்களும் திட்ட விளக்க உரையாற்றினார்கள். முகாமிற்கு தலைமை தாங்கிய ராணிப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் பா.முருகேசன் சிறப்பு உரையாற்றினார். பின்னர், விழா மேடையிலிருந்து கீழே இறங்கி பொது மக்கள் உட்கார்ந்துள்ள இடத்திற்கு சென்று அரசு நலஉதவிகளை வழங்கினார்.     பள்ளுர், திருமால்பூர், மற்றும் நெல்வாய் ஆகிய மூன்று வருவாய் கிராம மக்கள் 71 மனுக்களை கொடுத்தனர் இவற்றில் தகுதியுடைய 61 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நலஉதவிகள் வழங்க தேர்வு செய்யப்பட்டனர். இவற்றில் ஓய்வூதியம் கோரிய தகுதியற்ற ஒன்பது பேரின் மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.     நிகழ்வுகளை கிராம நிர்வாக அதிகாரி புலவர் தணிகாசலம் தொகுத்து வழங்கினார். அரக்கோணம் டவுன் வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர் விஜயரங்கன், கிராம அதிகாரிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மண்டல துணை வட்டாச்சியர் சரவணமுத்து நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்