முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள் : பா.ஜ.க எம்.பி.க்களுக்கு மேலிடம் உத்தரவு

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பிரதமர் நரேந்திர மோடியின் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுமாறு பாஜக எம்.பி.க்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்:
ஏழைகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். இது குறித்து பாஜக எம்.பி.க்கள் மக்களிடம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் உரையில் சுட்டிக்காட்டப்பட்ட அரசின் சாதனைகள், தொலைநோக்கு திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீடுவீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன:
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது, நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சுமார் 6.5 லட்சம் பேருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பாஜக எம்.பி.க்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் நிருபர்களிடம் கூறியபோது, ‘குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் மக்களவையில் 9 மணி நேரம் நீடித்தது. எதிரி சொத்து சட்டம் உள்ளிட்ட 3 மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேறும்’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்