முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி 48-வது ஆண்டு விழா:கலெக்டர் மு.ஆசியா மரியம் பங்கேற்பு

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 48-வது ஆண்டு விழா மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா இன்று (08.02.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஏறத்தாழ 2800க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயின்று வருவதாக இக்கல்லூரியின் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது மிகுந்த பாராட்டுக்குரியது. மகளிர் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், பட்ட மேற்படிப்பு பயில்வதற்கும் இதுபோன்ற கல்லூரிகள் தமது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. மாணவியர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் விளையாட்டிலும் பங்கேற்க வேண்டும். அவ்வாறு விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் உடல் ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் ஏற்படும். தற்போது மருத்துவத்துறையின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கான பரிசோதனை ஆய்வில் பெரும்பாலான பெண்களுக்கு அனிமியா எனப்படும் இரத்தச் சோகை நோய் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் பெண்களாகிய நாம் நல்ல சத்தான உணவுகளை உண்ணாதது, முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதது, உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது போன்றவைகள் ஆகும். இளம் வயது மாணவ, மாணவியர்கள் நல்ல சத்தான உணவுகளை நாள்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும். படிப்பிற்கு தனிக்கவனம் செலுத்துவது போல விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார்.முன்னதாக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியின் 48-வது விளையாட்டு விழாவினை கலெக்டர் மு.ஆசியா மரியம் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைத்து வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ம.ஜெயந்தி வைலட் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உடற்கல்வி இயக்குநர் (பொ) உதவிப் பேராசிரியர் மற்றும் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் இரா.பத்மாவதி அவர்கள் உடற்கல்வி ஆண்டறிக்கையினை வாசித்தார். இவ்விழாவில் கல்லூரி மாணவியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளையாட்டுச் செயலர் முதுநிலை இரண்டாம் ஆண்டு வரலாற்று மாணவி செல்வி.ஆ.கௌரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்