முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 95,665 பேர் திரும்ப அழைப்பு

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, போர், உள்நாட்டு சண்டை, பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 95,665 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்று லோக்சபையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளனர்.

அமெரிக்கா,கனடா,ஐரோப்பா நாடுகள், அரபு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். போர், உள்நாட்டு கலவரம், வளைகுடா நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலைக்கு சென்ற இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றிருந்தவர்களில் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு திரும்ப வர வேண்டும் என்று அவர்கள் சம்பந்தப்பட்ட இந்திய தூதரங்கள் மூலம் கூறினர்.

திரும்ப அழைப்பு:

இதனை ஏற்று கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 95 ஆயிரத்து 665 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று லோக்சபையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் பல்வேறு காரணங்களால் சிக்கி தவித்துக்கொண்டியிருந்த இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் இருந்து 65 ஆயிரம் பேரும், மலேசியா,12 ஆயிரத்து 475 பேரும் ஏமன் 4 ஆயிரத்து 748, ஓமன் 3,225 பேரும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.

இந்தாண்டு கடந்த 2-ம் தேதி முடிய வளைகுடா நாடுகளில் 594 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தனிப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்