முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதன்கோட் தாக்குதல் வழக்கில் மசூத் அசாருக்கு எதிராக மொகாலி கோர்ட்டு நோட்டீஸ்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மசூத் அசார் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக மொகாலி கோர்ட்டு பிரகடன நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நள்ளிரவில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில், 7 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார், அவருடைய தம்பி முப்தி அப்துல் ரவுப் உள்ளிட்ட 4 பேர் மீது பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பிரகடன நோட்டீஸ்
இந்நிலையில், மசூத் அசார் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக மொகாலி கோர்ட்டு நேற்று முன்தினம் பிரகடன நோட்டீஸ் வெளியிட்டது. இதன்படி, இந்த நோட்டீஸ், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள பத்திரிகைகளில் வெளியிடப்படும். 4 பேரும் மார்ச் 9-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி, ஐ.நா. குழுவில் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்