முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பாகிஸ்தானின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 6.3-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று காலை சுமார் 3:03 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் கடற்கரை பகுதியான பஸ்னிக்கு தென்மேற்கு  பகுதியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உண்டானதாக புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில்....
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆக நிலநடுக்கம்  உணரப்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் எதிரொலி இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்  பாகிஸ்தானியர்கள் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்